கல்லறையில் பொறிக்கும் எழுத்துகளில் கூட நீ நீயாகத்தான் இருக்க வேண்டும் -செல்வராகவன்


கல்லறையில் பொறிக்கும் எழுத்துகளில் கூட நீ நீயாகத்தான் இருக்க வேண்டும் -செல்வராகவன்
x

நடிகர் செல்வராகவன், விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் அவ்வப்போது தனது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன், அதன்பின்னர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். தற்போது 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தில் செல்வராகவன் மும்முரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன் பீஸ்ட், சாணிக் காயிதம், , பகாசூரன் போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார். தொடர்ந்து ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவ்வப்போது தனது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வரும் செல்வராகவன் தற்போது பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தி ஈர்த்து வருகிறது. அதில், "அவர் சொல்கிறார் என கொஞ்சம் , இவர் சொல்கிறார் என கொஞ்சம் என்று நம்மை நாம் மாற்றிக் கொண்டே போனால் இறுதியில் மண்டை ஓடு கூட மிஞ்சாது. கல்லறையில் பொறிக்கும் எழுத்துகளில் கூட நீ நீயாகத்தான் இருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story