அஜித்துடன் இணையும் தனுஷ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்


அஜித்துடன் இணையும் தனுஷ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
x

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

எச். வினோத் இயக்கத்தில் வெளியான 'துணிவு' படத்தின் வெற்றியைத்தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதே போன்று நடிகர் தனுஷ், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நடிகர்கள் அஜித், தனுஷ் மற்றும் பரத் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் அஜித், தனுஷ் மற்றும் பரத் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் இந்த படம் உறுதியானால் தன் வாழ்க்கை வேறு மாதிரி மாறிவிடும் என பரத் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Related Tags :
Next Story