தியேட்டருக்கு போய் படம் பார்க்க சபதம் ஏற்போம்- டைரக்டர் மோகன் ராஜா


தியேட்டருக்கு போய் படம் பார்க்க சபதம் ஏற்போம்- டைரக்டர் மோகன் ராஜா
x

அனைவரும் திரையரங்கிற்கு வந்து படத்தைப் பார்க்க வேண்டும். தியேட்டருக்கு போய் படம் பார்க்க சபதம் ஏற்போம் என்று டைரக்டர் மோகன் ராஜா பேசினார்.

மணிபாரதி இயக்கியுள்ள 'பேட்டரி' பட விழாவில் டைரக்டர் மோகன் ராஜா கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-


"அனுபவம் எப்போதும் தோல்வி அடையாது. 'பேட்டரி' படக்குழுவினர் அனுபவம் வாய்ந்தவர்கள். இயக்குனர் மணிபாரதியால்தான் 'வேலைக்காரன்' படத்தில் சினேகா கதாபாத்திரம் உருவானது. அந்தப் படத்தில் அவர் எனக்கு உறுதுணையாக இருந்தார்.

இளமை புதுமையை தரலாம். அனுபவம்தான் அழுத்தத்தை தரும். கொரோனா இன்னும் சவாலாக இருக்கும் காலத்தில் அனைவரும் தியேட்டருக்கு போய் படம் பார்ப்போம் என்று சபதம் ஏற்போம்" என்றார்.

1 More update

Next Story