பிரஜின் பட இயக்குனருடன் இணைந்த நகுல்
இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் நகுல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பிரஜின் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டி3' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி. இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் நகுல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏ.ஜே. என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சதீஷ் எம்.எஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.
கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ள இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'நிற்க அதற்கு தக' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.
வயலினில் ரத்தம் வடிவது போன்று உருவாகியுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
Related Tags :
Next Story