நரச்ச நெத்தி முடி மயக்குதயா.. விக்ரமை வர்ணிக்கும் ரித்து வர்மா
விக்ரம் நடித்துள்ள திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்துள்ளார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நரச்ச முடி' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. விக்ரமை ரித்து வர்மா வர்ணிப்பது போன்று உருவாகியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
Related Tags :
Next Story