பிரபல நடிகருடன் இணையும் பூஜா ஹெக்டே.. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்


பிரபல நடிகருடன் இணையும் பூஜா ஹெக்டே.. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
x

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார். சமீபத்தில் நடந்த கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பூஜா ஹெக்டே கலந்துக்கொண்டார்.

தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின்னர், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் களம் இறங்கினார். தெலுங்கில் பிரபாஸ், இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்கள் பெற்றது. தற்போது இவர் கைவசம் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஜன கன மன படம் உள்ளது.

இந்நிலையில், கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான யஷ் நடிக்கும் அடுத்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதன்முறையாக யஷ் படத்தில் இவர் இணையவுள்ளதால் படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story