ராஷ்மிகாவின் புதிய படம்...!


ராஷ்மிகாவின் புதிய படம்...!
x

ராஷ்மிகா மந்தனா ‘தி கேர்ள் பிரண்ட்' என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பிரபல கதாநாயகியாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, அடுத்து 'தி கேர்ள் பிரண்ட்' என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ராகுல் ரவீந்திரன் டைரக்டு செய்கிறார். இது பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சத்தில் தயாராகிறது.

படக்குழுவினர் கூறும்போது, ''தி கேர்ள் பிரண்ட் படத்தில் ராஷ்மிகா மந்தனா அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்த தயாராகி வருகிறார். இந்த படம் அனைத்து வயதினரும் கொண்டாடும் அழகான சினிமா அனுபவமாக இருக்கும். தனது காதலியிடம் எதிர்பார்க்கும் உரையாடல்களை அழுத்தமாக சொல்லும் கதையாகவும் இருக்கும்.

இந்த படத்தில் ராஷ்மிகா தனது நடிப்பால் அசத்த உள்ளார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது'' என்றனர். ராஷ்மிகாவின் தோற்றம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.

1 More update

Next Story