நடிகர் சித்தார்த்துடன் அதிதிராவ் காதலா?


நடிகர் சித்தார்த்துடன் அதிதிராவ் காதலா?
x

நடிகர் சித்தார்த்தும் அதிதி ராவும் காதலித்து வருவதாகவும், பல இடங்களில் இருவரும் ஜோடியாக ஊர் சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' படம் மூலம் தமிழில் அறிமுகமாகி பிரபலமானவர் அதிதிராவ் ஹைத்ரி. தொடர்ந்து செக்க சிவந்த வானம் படத்தில் அரவிந்த்சாமி ஜோடியாக நடித்தார். உதய நிதியுடன் சைக்கோ, துல்கர் சல்மான் ஜோடியாக ஹேய் சினாமிகா படங்களிலும் நடித்து இருந்தார். இவருக்கும், நடிகர் சித்தார்த்துக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் பரவி உள்ளது. இருவரும் மும்பையில் உள்ள ஒரு சிகை அலங்கார நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர். அப்போது போட்டோகிராபர்கள் அவர்களை படம் பிடிக்க முயற்சித்தனர். அதிதி மட்டும் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். பின்னர் இருவரும் ஒரே காரில் ஏறி புறப்பட்டு சென்றனர். இந்த வீடியோ வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

இதன் மூலம் இருவரும் காதலிப்பதாக இந்தி, தெலுங்கு இணைய தளங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. சித்தார்த்தும், அதிதியும் மஹா சமுத்திரம் என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் சித்தார்த் பிறந்தநாள் கொண்டாடியபோது அதிதி வாழ்த்து தெரிவித்து வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டார். ஆனாலும் காதலிப்பதை இருவரும் உறுதிப்படுத்தவில்லை.

1 More update

Next Story