நியூ லுக்கில் மாஸ் காட்டிய சிம்பு.. ஹார்ட் விடும் ரசிகைகள்..


நியூ லுக்கில் மாஸ் காட்டிய சிம்பு.. ஹார்ட் விடும் ரசிகைகள்..
x

சிம்புவின் ’பத்து தல’ திரைப்படம் வருகிற 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இப்படத்தின் இசை வெளியீடு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 'பத்து தல' இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள நடிகர் சிம்பு தாய்லாந்தில் இருந்து சென்னை திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நீண்ட முடியுடன் இருக்கும் சிம்புவின் நியூலுக் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இவர் விமான நிலையம் செல்லும் வீடியோவையும் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story