மீண்டும் இணையும் சூரரைப்போற்று படக்குழு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
நடிகர் சூர்யா ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியானது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இதைத்தொடர்ந்து, சூர்யாவின் 43-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாகவும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும் செய்தி பரவியது. இந்நிலையில், இதை உறுதிப்படுத்தும் வகையில் சூர்யா அப்டேட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாக சூர்யா, ரசிகர்களை சந்தித்த போது தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.