அந்த ஆசை விரைவில் நிறைவேறும் - நடிகை சரண்யா பொன்வண்ணன் நம்பிக்கை

தமிழ் திரையுலகில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சரண்யா. இவர் முன்னணி நடிகர்கள் படங்களில் அம்மாவாக நடித்து வருகிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், தற்போது பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் அம்மாவாக நடித்து வருகிறார்.
அவரது சாதுவான தோற்றமும், கதாபாத்திரத்தில் அவர் காட்டும் கலகலப்பும் வெகுவாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அஜித், சூர்யா, விக்ரம், கார்த்தி, சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி போன்ற பல கதாநாயகர்களுக்கு அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடித்திருக்கிறார்.
ஆனால் விஜய்க்கு மட்டும் இதுவரை அவர் அம்மாவாக நடிக்கவில்லை. இதுகுறித்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சரண்யா பொன்வண்ணன் கூறும்போது, "தமிழ் சினிமாவில் பல கதாநாயகர்களுக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். விஜய்யுடன் நடிக்கும் அந்த வாய்ப்பு இதுவரை அமையவில்லை. விஜய்க்கு அம்மாவாக நடிக்க எனக்கு ஆசை இருக்கிறது. அந்த எண்ணம் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது" என்று கூறினார்.






