'அயலான்' திரைப்படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு


அயலான் திரைப்படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
x

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ திரைப்படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் அயலான். இப்படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார்.

ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் இப்படம் 2024-ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், 'அயலான்' திரைப்படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Next Story