தனுஷ் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு


தனுஷ் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு
x

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. 'கேப்டன் மில்லர்'. படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

ராக்கி, சாணிக் காயிதம் படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் இணைந்துள்ளார்.

மேலும் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலானது.

இப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்த நிலையில், அறிவித்தபடி இப்படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


Next Story