ஒரு படத்தின் ஹீரோ ஸ்கிரிப்ட் தான் - நடிகர் சத்யராஜ் கருத்து


ஒரு படத்தின் ஹீரோ ஸ்கிரிப்ட் தான் - நடிகர் சத்யராஜ் கருத்து
x

இயக்குனர்கள் பி.ஜி. மோகன் - எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தீர்க்கதரிசி’. இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் சார்பில் சார்பில் பி.சதீஷ் குமார் தயாரிப்பில், பி.ஜி. மோகன் - எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில் சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் நடிப்பில் உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் திரில்லர் திரைப்படம் 'தீர்க்கதரிசி'. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பேரரசு பேசியதாவது, "இந்த படத்தின் இயக்குனர்கள் மிகச்சிறந்த இயக்குனர்களிடம் இருந்து வந்தவர்கள். அது இந்த படத்தில் நன்றாகத் தெரிகிறது. ஒரு நேர்த்தியான காவல்துறை படமாக இருக்குமென்பது பார்க்கும்போதே தெரிகிறது. அதோடு சத்யராஜ் சார் உடைய நடிப்பு, தீர்க்கதரிசி என்ற தலைப்புக்கு ஏற்றவாறு அற்புதமாக இருக்கிறது. அஞ்சாதே படத்தில் சிறப்பாக நடித்த அஜ்மல் இந்த படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்" என்று பேசினார்.

நடிகர் சத்யராஜ் பேசியதாவது, "இது போன்ற சிறிய படங்கள் செய்யத் தயாரிப்பாளருக்கு நல்ல அனுபவம் தேவை. தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற இரட்டை இயக்குனர்கள் வரிசையில் இந்த இயக்குனர்களும் இணைய வேண்டும். ஒரு படத்தின் ஹீரோ ஸ்கிரிப்ட் தான். இந்த படத்தின் கதையும் அந்த வகையில் சிறப்பாக இருக்கும். அஜ்மல் மிகச்சிறந்த நடிகர் என்பது இந்த படத்தின் மூலம் தெரிந்தது. கண்டெண்ட் சிறப்பாக இருந்தால் வெற்றி பெற்றுவிடலாம். இந்த படத்திலும் நல்ல கண்டெண்ட் இருக்கிறது. இந்த படம் வெற்றி பெற உங்களது ஆதரவைத் தாருங்கள் நன்றி" என்று பேசினார்.

1 More update

Next Story