மனைவி சொல்லே மந்திரம்


மனைவி சொல்லே மந்திரம்
x

கார்த்திக்கின் மகனும், நடிகருமான கவுதம் கார்த்திக், நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து மணந்தார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவுதம் கார்த்திக் மனம் திறந்து பேசினார். அப்போது, ''நான் யாரிடமும் பணம் வாங்கக் கூடாது என்று நினைப்பேன். எனது திருமணத்தைக் கூட சொந்த செலவில் செய்தேன். கொரோனா காலத்தில் கொஞ்சம் சிரமப்பட்டேன். அப்போது எனக்கு துணையாக இருந்தவர் மஞ்சிமா தான். எந்தவொரு முடிவாக இருந்தாலும் அவரிடம் கலந்து ஆலோசித்தே எடுப்பேன்'' என்றார். மனைவி சொல்லே மந்திரம் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் என்கின்றனர்.

1 More update

Next Story