வைரலாகும் பிரித்விராஜ்- ஏ.ஆர்.ரகுமான் படத்தின் புதிய போஸ்டர்

பிரித்விராஜ் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'ஆடு ஜீவிதம்'. இப்படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.
மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் தற்போது 'ஆடு ஜீவிதம்' என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பிளஸ்சி இயக்கி உள்ளார். பென்யாமினின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.
இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சவுதி அரோபியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு ஓட்டகம் மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞன் பற்றிய கதையே இந்த படம். பிருதிவிராஜ் ஒட்டகம் மேய்ப்பவராக நடித்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், 'ஆடு ஜீவிதம்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆடுகளுக்கு நடுவில் நீளமான முடி மற்றும் தாடியுடன் பிரித்விராஜ் இருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.