உதவியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த 'திமிரு' பட நடிகை


உதவியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த திமிரு பட நடிகை
x

தமிழ், தெலுங்கு, மலையாளம் என படங்களில் நடித்து வருபவர் ஸ்ரேயா ரெட்டி. இவர் தற்போது ‘சலார்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடந்த 2002-ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான 'சாமுராய்' படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரேயா ரெட்டி. இதைத்தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளியான 'திமிரு' படத்தில் இவர் நடித்திருந்த வில்லி கதாபாத்திரம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது.

தொடர்ந்து, வெயில், காஞ்சிவரம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். கடந்த 2008-ம் ஆண்டு விஷாலின் சகோதரர் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். மேலும் விஷாலின் தோரணை, வெடி உள்ளிட்ட படங்களையும் ஸ்ரேயா ரெட்டி தயாரித்துள்ளார்.

இவர் தற்போது இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வரும் 'சலார்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில், இந்த படத்தில் தன்னுடன் பணியாற்றிய உதவியாளர்களுக்கு தங்க நாணயங்களை ஸ்ரேயா ரெட்டி பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story