நான் தான் வேண்டும் என வெயிட் பண்ணி இந்தப்படம் எடுத்துள்ளார்கள் - நடிகர் வெற்றி


நான் தான் வேண்டும் என வெயிட் பண்ணி இந்தப்படம் எடுத்துள்ளார்கள் - நடிகர் வெற்றி
x

நடிகர் வெற்றி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘மெமரீஸ்’. இப்படம் வருகிற 10 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குனர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மெமரீஸ்'. இந்த படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்க பார்வதி அருண் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரமேஷ் திலக் ஒரு முக்கிய பாத்திரத்தில் இணைந்து நடித்திருக்கிறார்.

சிஜு தமீன்ஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்துள்ளார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். அர்மோ மற்றும் கிரண் நுபிதால் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சைக்கோ திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் உலகமெங்கும் மார்ச் 10 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் வெற்றி பேசியதாவது, "எட்டு தோட்டாக்கள் முடிந்த உடனே இந்த கதையை என்னிடம் சொன்னார்கள். 2 வருடத்தில் பேசிக்கொண்டே இருந்தோம். அந்த நேரத்தில் வேறு ஹீரோவை வைத்துப் பண்ணுங்கள் என்று சொன்னேன் ஆனால் நான் தான் வேண்டும் என வெயிட் பண்ணி இந்தப்படம் எடுத்துள்ளார்கள். என்னை நம்பியதற்காக இயக்குநர்களுக்கு நன்றி. முழுக்க அடர்ந்த காட்டுக்குள், கஷ்டப்பட்டு படம்பிடித்துள்ளோம். எனக்கு இதில் 4 தோற்றங்கள். படம் நன்றாக வந்துள்ளது பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி" என்று பேசினார்.

இயக்குனர் ப்ரவீன் பேசியதாவது, "மெமரீஸ் வைத்து இதுவரை நிறையப் படங்கள் வந்துள்ளது. ஆனால் இதில் நீங்கள் படம் பார்க்கும் போது நீங்களே அந்த பாத்திரமாக மாறிவிடுவீர்கள் அப்படி மாறி பார்க்கும் போது படம் எளிதாகப் புரியும். இந்தப்படம் உங்களுக்கு நிறைய ஆச்சரியம் தரும்." என்று பேசினார்.

இயக்குனர் ஷியாம் பேசியதாவது, "நான் மலையாளி, தமிழில் படம் செய்துள்ளேன். இக்கதைக்காகக் கேரளாவில் தயாரிப்பாளர் தேடின போது யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. வெற்றி நாயகனாக நடிக்கிறார் என்று கூறியபோது ஷிஜு சார் ஜீவி படம் பார்த்து உடனே படம் செய்யலாம் என ஒத்துக்கொண்டார். வெற்றி இப்படத்தில் 4 தோற்றங்களில் வருவார். இப்படம் மிக சிக்கலான சைக்கலாஜிக்கல் திரில்லர். படம் ஒரு புது அனுபவமாக இருக்கும். உங்கள் ஆதரவைப் படத்திற்குத் தாருங்கள் நன்றி." என்று பேசினார்.


Next Story