ஆறு படங்களில் வேதிகா


ஆறு படங்களில் வேதிகா
x

நடிகை வேதிகா கொஞ்சம் இடைவெளிக்கு பிறகு தற்போது ஆறு படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.

ரசிகர்கள் எளிதில் மறக்க முடியாத நடிகை வேதிகா. காளை, முனி, பரதேசி, போன்ற படங்களின் மூலம் திறமையான நடிகை என்று பெயர் பெற்றவர். கொஞ்சம் இடைவெளிக்கு பிறகு தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடிக்கத் தொடங்கி இருக்கிறார். தமிழில் பிரபு தேவாவுடன் `பேட்ட ராப்' மற்றும் கதையின் நாயகியாக `மஹால்' ஆகிய படங்களில் நடிக்கிறார். தெலுங்கு வெப் தொடரிலும் நடிக்கிறார். அனைத்து மொழிகளிலும் ஆறு படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். பான் இந்தியா சீசனில் மீண்டும் தன் ஆட்டத்தை தொடங்கி இருக்கிறார்.

1 More update

Next Story