நாடு எங்கே செல்கிறது - நடிகர் பிரகாஷ் ராஜ்


நாடு எங்கே செல்கிறது - நடிகர் பிரகாஷ் ராஜ்
x

டூயட் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் சில படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார்.

கே.பாலசந்தர் இயக்கத்தில் 1994-ம் ஆண்டு வெளியான டூயட் படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் பிரகாஷ் ராஜ். அதன்பின் ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தார். சில படங்களை இயக்கியும், தயாரித்தும் அனைவரையும் கவர்ந்தார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் பிரகாஷ் ராஜ், அவ்வப்போது அரசியல் குறித்து பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார். மேலும், பா.ஜ.க. அரசு குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி குறித்து பல விமர்சனங்களை வைத்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ராமர், ஆஞ்சநேயர், அசோக சின்னத்தில் இருக்கும் சிங்கங்களின் முகம் ஆகியவற்றின் முந்தைய மற்றும் தற்போதைய புகைப்படக்களை பதிவிட்டு "நாடு எங்கே செல்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் இருக்கும் தேசிய சின்னமான நான்கு சிங்கங்களை கொண்ட முத்திரையின் வெண்கல சிலை பழைய சிங்கத்தில் இருந்து மாறுபட்டு இருப்பதாக பலர் குற்றம் சாட்டி வந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது அதனை சுட்டிக்காட்டும் விதமாக கருத்தை பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story