காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பாரா?


காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பாரா?
x

மீண்டும் படங்களில் காஜல் அகர்வால் நடிப்பாரா அல்லது முழுமையாக சினிமாவை விட்டு விலகி விடுவாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த காஜல் அகர்வால் நடிப்பில் கோமாளி படம் 2019-ல் வெளியானது. அதன்பிறகு திருமணத்துக்கு முன்பே நடித்து முடித்த ஹேய் சினாமிகா படம் வந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது புதிய படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். தெலுங்கில் ஏற்கனவே நடித்த ஆச்சார்யா படத்தில் இருந்து விலகிவிட்டார். அந்த படத்தில் அவர் நடித்து இருந்த சில காட்சிகளை நீக்கி விட்டனர்.

கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்-2 படத்துக்கு ஒப்பந்தம் செய்தனர். இப்போது அவருக்கு பதில் வேறு கதாநாயகியை பரிசீலிக்கின்றனர். மீண்டும் படங்களில் காஜல் அகர்வால் நடிப்பாரா அல்லது முழுமையாக சினிமாவை விட்டு விலகி விடுவாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த வருடம் முழுவதும் படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவில் அவர் இருப்பதாகவும் அடுத்த வருடம் நடிப்பது குறித்து யோசிப்பார் என்றும் காஜல் அகர்வாலுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து உள்ளனர்.


Next Story