ஆசை நிறைவேறுமா?


ஆசை நிறைவேறுமா?
x

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சுகன்யா, ரஜினிகாந்த் ஜோடியாக மட்டும் நடிக்கவே இல்லை. அதுபற்றி மனம் திறந்த அவர், "ஓய்வு இல்லாமல் நடித்த எனக்கு ரஜினியுடன் நடிக்க மட்டும் வாய்ப்பு அமையவில்லை. இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் கூட 'நீங்க எதுக்காக ரஜினி படத்துல நடிக்க மாட்டேன் என்று சொன்னீங்க?' என்று என்னை திட்டினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 'முத்து' படத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் எனக்கு தெரியாமலேயே அந்த வாய்ப்பு பறிபோயிருக்கிறது" என்று வேதனையோடு தெரிவித்தார். ரஜினி படத்தில் நடிக்க ஆசை உள்ளதாம். அது நிறைவேறுமா?

1 More update

Next Story