திருச்சியில் பரபரப்பு .. போலீஸ் ரோந்து வாகன கண்ணாடி உடைப்பு; அஜீத் ரசிகருக்கு வலைவீச்சு
திருச்சி இ.பி.ரோட்டில் நடிகர் அஜித் ரசிகர்கள் சிலர்,வலிமை திரைப்படத்தை வரவேற்று பிளக்ஸ் பேனர் வைத்துக் கொண்டிருந்தனர்
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் சரக ரோந்து போலீசார் நேற்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்சி இ.பி.ரோட்டில் நடிகர் அஜித் ரசிகர்கள் சிலர், பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள வலிமை திரைப்படத்தை வரவேற்று பிளக்ஸ் பேனர் வைத்துக் கொண்டிருந்தனர்.
இதைப்பார்த்த ரோந்து போலீசார், பொது இடத்தில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதாகவும், எனவே பிளக்ஸ் பேனர் வைக்க கூடாது என்று போலீசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஒரு ரசிகர் போலீஸ் ரோந்து வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை ஓங்கி கைகளால் அடித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதில் வானத்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் விசாரணை நடத்தி, தப்பி ஓடிய அஜீத் ரசிகரை தேடிவருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story