காஞ்சீபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மின் மோட்டாருக்கான மானியம் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு


காஞ்சீபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மின் மோட்டாருக்கான மானியம் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 24 March 2022 7:41 PM IST (Updated: 24 March 2022 7:53 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மின் மோட்டாருக்கான மானியம் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மின் மோட்டார்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேளாண்மை பொறியியல் துறையில் சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வழங்கும் திட்டம் தொடர்பாக தனி நிதிநிலை அறிக்கை அறிவிக்கப்பட்டு, அரசாணை பெறப்பட்டுள்ளது.

இந்த திட்டம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. 3 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள் பாசன நீர் இறைத்திட புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின் மோட்டார் பம்பு செட்டுகளை மாற்றி புதிதாக பொருத்தவும் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் 3 ஏக்கர் வரை விளைநிலம் வைத்துள்ள விவசாயிகள் சிறு, குறு விவசாய சான்றிதழ், சிட்டா, அடங்கல், கிணறு அமைந்துள்ள நில வரைபடம், மின்சார இணைப்பு அட்டை விவரம் மற்றும் வங்கி புத்தகத்தின் முதல் பக்க நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்றவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

மானியம் பெறலாம்

காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள உதவி செயற்பொறியாளர்(வே.பொ), வேளாண்மை பொறியியல் அலுவலகத்தில் நேரில் வந்து மேற்குறிப்பிட்ட ஆவணங்களை அளித்து பதிவு செய்து கொள்ளலாம் அல்லது http://mis.aed.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து முன்னுரிமைப்படி பின்னேற்பு மானியம் பெறலாம்.

மேலும், உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையம், பஞ்சுப்பேட்டை, காஞ்சீபுரம் - 631502 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story