ஏகனாபுரம்


ஏகனாபுரம்
x
தினத்தந்தி 22 Dec 2016 3:41 PM IST (Updated: 22 Dec 2016 3:41 PM IST)
t-max-icont-min-icon

வி.ஆர்.இன்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் வி.ரவி கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் ‘ஏகனாபுரம்’. இப்படத்தில் ரித்திகா, ஜோதிஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜானகி, உமா, பூவிதா, நெலை சிவா, பவா லட்சுமணன், சங்கர், ராஜசிம்மன், மணிமாறன், செவ்வாழை, சிட்டிசன் மணி, குழந்தை நட்சத்தி

வி.ஆர்.இன்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் வி.ரவி கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் ‘ஏகனாபுரம்’. இப்படத்தில் ரித்திகா, ஜோதிஷா  ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜானகி, உமா,   பூவிதா, நெலை சிவா, பவா லட்சுமணன், சங்கர், ராஜசிம்மன்,  மணிமாறன், செவ்வாழை, சிட்டிசன் மணி, குழந்தை நட்சத்திரங்கள் பார்த்தசார்தி, சந்துரு, ரேவதி சக்திவேல் ஆகியோரும் நடித்துள்ளன்ர்.

இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் சுரேஷ் நட்சத்திரா  படம் குறித்து கூறும்போது,  இது முழுக்க முழுக்க கிராமத்தில் நடக்கும் ஒரு காதல் கதை! அதை சென்டிமென்ட், நகைச்சுவை, அதிரடி ஆக்‌ஷன் கலந்து இயக்கியுள்ளேன் என்றார். இப்படத்திற்கு டி.எஸ்.மணிமாறன் இசை அமைத்துள்ளார். ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களை அறிவுமதி, இளைய கம்பன் யுகபாரதி, நெய்தலூர் சங்கப்பிள்ளை ஆகியோர் எழுதியுள்ளனர்.
1 More update

Next Story