இவன் தந்திரன்


இவன் தந்திரன்
x
தினத்தந்தி 23 Dec 2016 12:08 PM IST (Updated: 23 Dec 2016 12:08 PM IST)
t-max-icont-min-icon

2 ஆயிரம் கல்லூரி மாணவர்களுடன் ‘இவன் தந்திரன்’ படப்பிடிப்பு கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க, ‘ஜெயம் கொண்டான்,’ ‘கண்டேன் காதலை,’ ‘சேட்டை’ உள்பட பல படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் டைரக்‌ஷனில் உருவாகி வரும் படம், ‘இவன் தந்திரன்.’ இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு மு

2 ஆயிரம் கல்லூரி மாணவர்களுடன் ‘இவன் தந்திரன்’ படப்பிடிப்பு

கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க, ‘ஜெயம் கொண்டான்,’ ‘கண்டேன் காதலை,’ ‘சேட்டை’ உள்பட பல படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் டைரக்‌ஷனில் உருவாகி வரும் படம், ‘இவன் தந்திரன்.’ இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது. இறுதி கட்ட படப்பிடிப்பு ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்தது. கல்லூரி நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதி பெற்று, 2 ஆயிரம் கல்லூரி மாணவர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்றது.

பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.எஸ்.தமன்
இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன்: ஆர்.கண்ணன்.

இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விடும் என்றும், கவுதம் கார்த்திக், ஆர்.ஜே.பாலாஜி சம்பந்தப்பட்ட நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது என்றும் டைரக்டர் ஆர்.கண்ணன் தெரிவித்தார். உச்சகட்ட சண்டை காட்சி, படத்துக்கு தனி முத்திரையாக இருக்கும் என்றும் அவர் கூறினார். பிப்ரவரி வெளியீடாக படம் திரைக்கு வரும் என்றார், அவர்.

1 More update

Next Story