துருவங்கள் பதினாறு


துருவங்கள் பதினாறு
x
தினத்தந்தி 23 Dec 2016 12:24 PM IST (Updated: 23 Dec 2016 12:23 PM IST)
t-max-icont-min-icon

28 நாட்களில் தயாரான ‘துருவங்கள் பதினாறு’ தீபக் என்ற காவல் துறை அதிகாரி ஒரு வழக்கை ஆய்வு செய்கிறார். அப்போது நிகழ்ந்த விபத்தில், அவர் ஒரு காலை இழக்கிறார். அதன் பிறகு அவர் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். 5 வருடங்களுக்குப்பின், அந்த வழக்கை மீண்டும் தூசு தட்ட நேரிடுகிறது. அப்போது திடுக்கிடும் உண்மைகள் வெளியாகிறது. அது, அவருடைய வாழ்க்கையில் என்னென்ன மாற்

28 நாட்களில் தயாரான ‘துருவங்கள் பதினாறு’

தீபக் என்ற காவல் துறை அதிகாரி ஒரு வழக்கை ஆய்வு செய்கிறார். அப்போது நிகழ்ந்த விபத்தில், அவர் ஒரு காலை இழக்கிறார். அதன் பிறகு அவர் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். 5 வருடங்களுக்குப்பின், அந்த வழக்கை மீண்டும் தூசு தட்ட நேரிடுகிறது.

அப்போது திடுக்கிடும் உண்மைகள் வெளியாகிறது. அது, அவருடைய வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது? என்பதை கருவாக வைத்து, ‘துருவங்கள் பதினாறு’ என்ற படம் தயாராகியிருக்கிறது.

படத்தை தயாரித்து டைரக்டு செய்திருப்பவர், கார்த்திக் நரேன் என்ற 21 வயது இளைஞர். இவர் கூறுகிறார்:-

“இது, 16 மணி நேரத்தில் நடக்கும் கதை. திரைக்கதை வழக்கமான பாணியில் இல்லாமல், ஒரு துப்பறியும் நாவலை படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். படத்தில், கதாநாயகன் -கதாநாயகி கிடையாது. 50 வயது போலீஸ் அதிகாரியாக ரகுமான் நடித்து இருக்கிறார்.

சம்பவங்கள் முழுவதும் கோவையில் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு சென்னை, கோவை, ஊட்டி ஆகிய இடங்களில் 28 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது. சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து இருக்கிறார். படத்தின் இணை தயாரிப்பு: கணேஷ்.”
1 More update

Next Story