கோடிட்ட இடங்களை நிரப்புக


கோடிட்ட இடங்களை நிரப்புக
x
தினத்தந்தி 24 Dec 2016 1:07 PM IST (Updated: 24 Dec 2016 1:07 PM IST)
t-max-icont-min-icon

பார்த்திபனின் இயக்கத்தில் சாந்தனு - பார்வதி நாயர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் "கோடிட்ட இடங்களை நிரப்புக'. இப்படத்தில் தம்பி ராமையா மற்றும் சிங்கம்புலி அண்ணாவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்

பார்த்திபனின் இயக்கத்தில் சாந்தனு - பார்வதி நாயர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் "கோடிட்ட இடங்களை நிரப்புக'.  இப்படத்தில் தம்பி ராமையா மற்றும் சிங்கம்புலி அண்ணாவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ரீல் எஸ்டேட் கம்பெனி எல் எல் பி மற்றும் பையாஸ்கோப் பிலிம் பிரேமர்ஸ் இணைந்து தயாரித்து இருக்கும் இப்படத்துக்கு சத்யா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ஜனா. படத்தொகுப்பாளர் ஆர் சுதர்சன். கலை இயக்குநர் ஆர் கே விஜய் முருகன் மற்றும் நடன இயக்குநர் பிரபு தேவா ஆகியோர்பணியாற்றியுள்ளனர்.

"பிழைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பது தான் எங்களின் "கோடிட்ட இடங்களை நிரப்புக'. அந்த பிழை ஒரு காதலாக இருக்கலாம், அல்லது வாழ்க்கையாக இருக்கலாம் அல்லது அதற்கும் மேலான ஒன்றாகவும் இருக்கலாம்'' என படத்தின் கதைக்களம் குறித்து பேசியிருக்கிறார் பார்த்திபன்.

1 More update

Next Story