மதுரை டூ தேனி-2


மதுரை டூ தேனி-2
x
தினத்தந்தி 3 Jan 2017 1:44 PM IST (Updated: 3 Jan 2017 1:44 PM IST)
t-max-icont-min-icon

பஸ் பயண அனுபவங்களுடன் ‘மதுரை டூ தேனி-2’ தமிழ் சினிமாவில், வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் வெளிவருவது சீசனாகி விட்டது. ‘சிங்கம்,’ ‘வேலையில்லா பட்டதாரி’ ஆகிய படங்களை தொடர்ந்து, ‘மதுரை டூ தேனி வழி: ஆண்டிப்

பஸ் பயண அனுபவங்களுடன் ‘மதுரை டூ தேனி-2’

தமிழ் சினிமாவில், வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் வெளிவருவது சீசனாகி விட்டது. ‘சிங்கம்,’ ‘வேலையில்லா பட்டதாரி’ ஆகிய படங்களை தொடர்ந்து, ‘மதுரை டூ தேனி வழி: ஆண்டிப்பட்டி’ படத்தின் இரண்டாம் பாகம், ‘மதுரை டூ தேனி-2’ என்ற பெயரில் தயாராகிறது.

இந்த படத்தில் புதுமுகங்கள் விஷ்வக், சிவகாசி பாலா ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாகவும், சவுமியா, தேஜஸ்வி இருவரும் நாயகிகளாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் முதல் பாகத்தில் நடித்த சந்தானபாரதி, நெல்லை சிவா, முத்துக்காளை, போண்டா மணி ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

செல்வராஜா பாடல்களை எழுத, சரவண கணேஷ் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, டைரக்‌ஷன் பொறுப்புகளை எஸ்பி.எஸ்.குகன் கவனிக்கிறார். படத்தை பற்றி இவர் கூறுகிறார்:-
“விஷுவல் கம்யூனிகேஷன் படித்த 2 மாணவர்களும், ஒரு மாணவியும் இணைந்து ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு முயற்சிக்கிறார்கள்.

அவர்களின் அந்த படம் இயக்கும் கனவு நிறைவேறியதா, இல்லையா? என்பதை காதல், நகைச்சுவை கலந்து, தேனியில் இருந்து மதுரை வருகிற பேருந்து பயணத்தின் சுவாரஸ்யங்களோடு சொல்கிறோம். எஸ்.ஜானகி சோணைமுத்து தயாரிக்கிறார். இணை தயாரிப்பு: ஏ.வெங்கடேஷ்வரி, ஜி.ஜானகி, சத்யவாணி அனந்த கிருஷ்ணன்.

தமிழ் சினிமாவில் முதல் முயற்சியாக, தியேட்டர்களில் வெறும் 19 ரூபாயில் படம் பார்க்கும் அனுபவத்தை ரசிகர்களுக்கு இந்த படம் தர இருக்கிறது.”
1 More update

Next Story