டோரா


டோரா
x
தினத்தந்தி 5 Jan 2017 2:54 PM IST (Updated: 5 Jan 2017 2:54 PM IST)
t-max-icont-min-icon

‘டோரா’ படத்துக்காக நயன்தாரா, ‘டப்பிங்’ பேசினார் நயன்தாரா நடித்த முதல் பேய் படமான ‘மாயா’வுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அடுத்து, ‘டோரா’ என்ற பேய் படத்தில் அவர் நடித்து இருக்கிறார். இந்த படத்தை டைரக்டர் சற்குணம் தயாரித்து இருக்கிறார். அவரிடம் உதவி டைரக்டராக இருந்த

‘டோரா’ படத்துக்காக நயன்தாரா, ‘டப்பிங்’ பேசினார்

நயன்தாரா நடித்த முதல் பேய் படமான ‘மாயா’வுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அடுத்து, ‘டோரா’ என்ற பேய் படத்தில் அவர் நடித்து இருக்கிறார். இந்த படத்தை டைரக்டர் சற்குணம் தயாரித்து இருக்கிறார். அவரிடம் உதவி டைரக்டராக இருந்த தாஸ் ராமசாமி டைரக்டு செய்திருக்கிறார்.

‘டோரா’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. படத்தொகுப்பு, பின்னணி இசை சேர்ப்பு மற்றும் குரல் சேர்ப்பு ஆகிய வேலைகள் நடைபெறுகிறது. இந்த படத்துக்காக நயன்தாரா சொந்த குரலில், ‘டப்பிங்’ பேசியிருக்கிறார்.

படத்தில் அவர், ‘பவளக்கொடி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். நயன்தாராவுக்கு அப்பாவாக தம்பிராமய்யா நடித்துள்ளார். ஒரு முக்கிய வேடத்தில் ஹரீஷ் உத்தமன் நடித்து இருக்கிறார். படத்தை பற்றி டைரக்டர் தாஸ் ராமசாமி கூறும்போது, “டோரா படத்தின் கதையை கேட்டதும் நயன்தாரா நடிக்க சம்மதித்தார். படத்தில், ஒரு கார் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது. அதுதான் பேய். அந்த காருக்கும், நயன்தாராவுக்கும் என்ன தொடர்பு? என்பது கதை” என்றார்.
1 More update

Next Story