எனக்கு வாய்த்த அடிமைகள்


எனக்கு வாய்த்த அடிமைகள்
x
தினத்தந்தி 6 Jan 2017 12:25 PM IST (Updated: 6 Jan 2017 12:25 PM IST)
t-max-icont-min-icon

ஜெய் நடித்த நகைச்சுவை படம் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ ‘சேதுபதி’ வெற்றியை தொடர்ந்து வான்சன் மூவீஸ் சார்பில் ஷான் சுதர்சன் தயாரிப்பில், அடுத்து வெளிவர இருக்கும் படம், ‘எனக்கு வாய்த்த அடிமைகள்.’ ஜெய் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்துக்கு மகேஷ் முத்து சுவாமி ஒளிப்பதிவு செய்கிறார். கதை- திரைக்க

ஜெய் நடித்த நகைச்சுவை படம் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’

‘சேதுபதி’ வெற்றியை தொடர்ந்து வான்சன் மூவீஸ் சார்பில் ஷான் சுதர்சன் தயாரிப்பில், அடுத்து வெளிவர இருக்கும் படம், ‘எனக்கு வாய்த்த அடிமைகள்.’ ஜெய் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்துக்கு மகேஷ் முத்து சுவாமி ஒளிப்பதிவு செய்கிறார். கதை- திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்திருக்கிறார், மகேந்திரன் ராஜமணி. படத்தை பற்றி இவர் கூறியதாவது:-
“ஐ.டி.யில் பணிபுரியும் கிருஷ்ணா, வங்கியில் வேலை செய்யும் ரமேஷ், ஷேர் ஆட்டோ ஓட்டும் அஜித்தின் தீவிர ரசிகர் மைதீன் பாட்ஷா, கால் சென்டரில் வேலை செய்யும் சவுமியா நாராயணன் ஆகிய நான்கு பேரும் நண்பர்கள்.

எதிர்பாராத காதல் தோல்வியால் கிருஷ்ணா மனம் உடைகிறான். அதில் இருந்து அவனை மீட்க மற்ற நண்பர்கள் படும் அவஸ்தைகளை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறோம்.

நண்பனின் காதலால் பாதிக்கப்பட்ட அனைத்து நண்பர்களுக்கான படம் இது. இதில் கிருஷ்ணாவாக ஜெய், ரமேசாக கருணாகரன், மைதீன் பாட்ஷாவாக காளி வெங்கட், சவுமியா நாராயணனாக நவீன் ஆகியோர் நடித்துள்ளனர். எந்த கதாநாயகியும் நடிக்க துணியாத ஒரு கதாபாத்திரத்தில், பிரணிதா துணிச்சலாக நடித்து இருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமய்யா, ஆர்.என்.ஆர்.மனோகர், மாரிமுத்து, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் வருகிறார்கள். இம்மாத வெளியீடாக படம் திரைக்கு வர இருக்கிறது.”
1 More update

Next Story