தமிழ்-இந்தியில் தயாராகிறது சற்குணம் டைரக்‌ஷனில் மாதவன் நடிக்கும் படம்


தமிழ்-இந்தியில் தயாராகிறது சற்குணம் டைரக்‌ஷனில் மாதவன் நடிக்கும் படம்
x
தினத்தந்தி 16 Jan 2017 1:12 PM IST (Updated: 16 Jan 2017 1:12 PM IST)
t-max-icont-min-icon

‘களவாணி,’ ‘வாகை சூடவா’ ஆகிய படங்களை டைரக்டு செய்த சற்குணம் அடுத்து ஒரு புதிய படத்தின் கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் மாதவன் கதாநாயகனாக நடிக்கிறார்.

தமிழ், இந்தி ஆகிய 2 மொழிகளில் படம் தயாராகிறது. படத்தில் குழந்தைகளை கவரும் விதமாக பறவைகள் மற்றும் விலங்குகள் தொடர்பான காட்சிகள் இடம்பெறுகின்றன. படத்தின் பெரும்பகுதி காட்சிகள் தாய்லாந்து, மங்கோலியா, தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் படமாக்கப்பட உள்ளன.

இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். நடிகர்-நடிகைகள் முடிவாகவில்லை. ‘ஆரஞ்சு மிட்டாய்,’ ‘றெக்க’ ஆகிய படங்களை தயாரித்த கணேஷ், ‘டோரா’ படத்தின் தயாரிப்பாளர் ஏ.நந்தகுமார் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். குழந்தைகள் மற்றும் குடும்பங்களை கவரும் வகையில் படம் தயாராகிறது.
1 More update

Next Story