சரத்குமார்-ராதிகா தயாரிப்பில் விஜய் ஆண்டனியின் புதிய படம்


சரத்குமார்-ராதிகா தயாரிப்பில் விஜய் ஆண்டனியின் புதிய படம்
x
தினத்தந்தி 16 Jan 2017 1:24 PM IST (Updated: 16 Jan 2017 1:24 PM IST)
t-max-icont-min-icon

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான் என தொடர் வெற்றி படங்கள் கொடுத்து வரும் விஜய் ஆண்டனி, அடுத்து சரத்குமார்-ராதிகா சரத்குமார் ஆகிய இருவரின் தயாரிப்பில் நடிக்கிறார்.

ஐ பிக்சர்ஸ் சார்பில் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படம் தயாராகிறது. படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. புது டைரக்டர் சீனுவாசன் இயக்குகிறார்.

இந்த படத்தில் நடிப்பது பற்றி விஜய் ஆண்டனி கூறியதாவது:-

ஒரு படம் முடிந்தவுடன் அடுத்த படத்தை ஒப்புக்கொள்வதில் நான் என்றுமே அவசரப்பட்டதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. வர்த்தகத்தை தாண்டி மனித உணர்வுகளும் செய்யும் தொழிலில் இருக்க வேண்டும் என்று நினைப்பவன், நான். அதன் அடிப்படையில்தான் ஆரம்ப காலத்தில் எனக்கு இசையமைக்கும் வாய்ப்பை கொடுத்த சரத்குமார்-ராதிகா சரத்குமார் தம்பதிக்கு படம் செய்து கொடுக்க சம்மதித்தேன்.

அறிமுக இயக்குனர் சீனுவாசன் கதையை சொன்னதுமே இவர்கள்தான் தயாரிப்பாளர்கள் என்று முடிவு செய்து விட்டேன். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் திட்டமிட்டபடி படத்தை தயாரித்து வெளியிட அசாத்திய திறமையும், மேலாண்மையும் வேண்டும். அதில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளாமல் இருக்க இப்படி எனக்கு ஒரு தயாரிப்பு நிறுவனம் தேவை. அடுத்த மாதம் (பிப்ரவரி) படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.”
1 More update

Next Story