அரச குலம்


அரச குலம்
x
தினத்தந்தி 17 Jan 2017 2:46 PM IST (Updated: 17 Jan 2017 2:46 PM IST)
t-max-icont-min-icon

தென் மாவட்ட மக்களின் வாழ்வியலை சொல்லும் ‘அரச குலம்’ தென் மாவட்ட மக்களின் நேசம், குடும்ப உறவுகள் மீது அவர்கள் வைத்திருக்கும் பாசம்,

அவர்களின் தன்னம்பிக்கை, காதல், நட்பு, தஞ்சம் என்று நம்பி வந்தவர்களுக்கு உயிரையும் கொடுக்கும் பண்பு ஆகியவற்றை சித்தரிக்கும் வகையில், ‘அரச குலம்’ என்ற படம் தயாராகி இருக்கிறது.
குமார் மாறன் கதை- திரைக்கதை -வசனம் எழுதி டைரக்டு செய்துள்ளார்.

ரத்தன் மவுலி கதாநாயகனாக நடிக்க, நயனா நாயர் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். எஸ்.ஆர்.சந்திரசேகர் ஒளிப்பதிவு செய்ய, வேலன் சகாதேவன் இசையமைத்துள்ளார். எஸ்.பூமாராம் சைன் தயாரித்து இருக்கிறார். இணை தயாரிப்பு: பாலமுருகன், ஜெயக்கொடி, பாண்டி, வரதராஜ். ஸ்ரீ உலகமாதா பிலிம்சும், கே.சந்திரசேகரும் இணைந்து படத்தை வெளியிடுகிறார்கள்.

1 More update

Next Story