சோக்காலி மைனர் ஆக நாகார்ஜுன்


சோக்காலி மைனர் ஆக நாகார்ஜுன்
x
தினத்தந்தி 17 Jan 2017 3:13 PM IST (Updated: 17 Jan 2017 3:13 PM IST)
t-max-icont-min-icon

‘சோக்காலி மைனர்’ ஆக நாகார்ஜுன்! ஆந்திராவில் வெற்றி பெற்ற ‘சோக்காலி மைனர்’ என்ற தெலுங்கு படம், அதே பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

இந்த படத்தில், நாகார்ஜுன் 2 வேடங்களில் நடித்து இருக்கிறார். அவருடன் ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, லாவண்யா திரிபாதி, நாசர், பிரமானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர்.

நகைச்சுவையான கதையம்சம் கொண்ட படம், இது. உல்லாச வாழ்க்கையில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு நாகார்ஜுன் சீக்கிரத்திலேயே எமலோகம் செல்வது போலவும், அங்கு அவருடைய தொல்லை தாங்காமல் எமதர்மன் தவிப்பது போலவும் ஒரு தமாசான காட்சி, படத்தில் இடம் பெற்றுள்ளது.

எம்.நிரஞ்சன் குமார் யாதவ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனுப்ரூபன்சும், ஜான் பீட்டரும் இசையமைத்துள்ளனர். மைக்கேல் யாகப்பன் வசனம் எழுதியிருக்கிறார். கல்யாண கிருஷ்ண குரசாலா டைரக்டு செய்திருக்கிறார். படம், அடுத்த மாதம் (பிப்ரவரி) திரைக்கு வருகிறது.
1 More update

Next Story