முத்துராமலிங்கம்


முத்துராமலிங்கம்
x
தினத்தந்தி 18 Jan 2017 11:51 AM IST (Updated: 18 Jan 2017 11:51 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம், ‘முத்துராமலிங்கம்.’ இதில்

, கவுதம் கார்த்திக்கின் தந்தையாக  நெப்போலியன் நடிக்க, கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். இந்த  படத்துக்காக, “தெற்கத்தி சிங்கமடா முத்துராமலிங்கம்” என்ற பாடலை  இளையராஜா இசையில், கமல்ஹாசன் பாடியிருக்கிறார். இந்த பாடல்  காட்சியில், கவுதம் கார்த்திக் நடித்தார். ராஜதுரை டைரக்டு செய்தார்.

‘முத்துராமலிங்கம்’ படத்தை பற்றி டைரக்டர் ராஜதுரை கூறுகிறார்:-
“கதாநாயகன் முத்துராமலிங்கத்தின் தந்தை சிலம்பம் கற்று தரும் பள்ளி நடத்தி
வருபவர். ஒரு சூழ்நிலையில், திருநெல்வேலியில் சிலம்ப போட்டி நடக்கிறது.
அதில் கதாநாயகனின் குழுவுக்கும், வில்லனின் குழுவுக்கும் மோதல்
ஏற்படுகிறது. கதாநாயகனையும், அவருடைய தந்தையையும் போலீஸ் அதிகாரி  கைது செய்ய முயற்சிக்கிறார்.

“கதாநாயகனுடன் சிலம்பம் ஆடி ஜெயித்தால் தாராளமாக கைது செய்யலாம்”
என்று போலீஸ் அதிகாரியிடம் கதாநாயகி சவால் விடுகிறார். அந்த சவாலை
போலீஸ் அதிகாரி ஏற்றுக் கொள்கிறார். சிலம்ப சண்டையில் வெற்றி யாருக்கு?
என்பது கதை. ‘பெப்சி’ விஜயனும், வம்சி கிருஷ்ணாவும் வில்லன்களாக நடித்து  இருக்கிறார்கள். விவேக், சுமன், சிங்கம்புலி, சிங்கமுத்து, சின்னி ஜெயந்த், ரேகா, விஜி சந்திரசேகரன் ஆகியோரும் நடித்துள்ளனர். குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்பில்  டி.விஜய் பிரகாஷ் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.”

```````

1 More update

Next Story