எங்கிட்ட மோதாதே


எங்கிட்ட மோதாதே
x

ராமு செல்லப்பா இயக்கத்தில் நட்டி என்கிற நடராஜன், ராஜாஜி சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர் உள்பட பலர் நடித்துள்ள படம் `எங்கிட்ட மோதாதே'. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நட்டி, "இந்த படத்தின் இயக்குநர் ராமு செல்லப்பா  கதை கூறியதும் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த குழுவுடன் சேர்ந்து இப்படத்தில் நடித்தது மிகச்சிறந்த அனுபவம்'' என்றார்.

சஞ்சிதா ஷெட்டி " நான் எப்போதும் மார்டன் ரோலுக்கு தான் பொருந்துவேன் என்ற எண்ணம் அனைவரிடமும் இருந்தது. ஆனால் அதை இப்போது இப்படத்தின் மூலம் இயக்குனர் ராமு செல்லப்பா மாற்றி விட்டார். இந்த படத்தில் நெல்லை பெண்ணாக நடித்தது எனக்கு பெருமையாக உள்ளது. நட்டி உடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவம்'' என்றார்.

விழாவில் கவிஞர் யுகபாரதி, தயாரிப்பாளர் ஈரோஸ் கங்கர், பார்வதி நாயர், இசை அமைப்பாளர் நடராஜன் சங்கரன், ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்த்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
1 More update

Next Story