சிங்கம்-3


சிங்கம்-3
x
தினத்தந்தி 21 Jan 2017 4:17 PM IST (Updated: 21 Jan 2017 4:17 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகம், ‘சி.3’ என்ற பெயரில் தயாராகி இருக்கிறது. இதில் சூர்யா, அனுஷ்கா, சுருதிஹாசன், ராதாரவி, விஜயகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹரி டைரக்டு செய்திருக்கிறார்.

வெளிநாடுகளில் படமான சூர்யாவின் ‘சி.3’

ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து இருக்கிறார். படத்தை பற்றி அவர் சொல்கிறார்;-
“சி.3 படத்தின் கதை ஆந்திராவில் தொடங்கி, ஆஸ்திரேலியாவில் முடியும். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு ஆஸ்திரேலியா, ருமேனியா, மலேசியா போன்ற நாடுகளில் நடந்துள்ளது. இதுவரை படப்பிடிப்பு நடந்திராத பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி உள்ளோம். இந்தியில் பிரபலமான அனூப்சிங் தாகூர் வில்லனாக வருகிறார். அவரது கதாபாத்திரம் வலுவானதாக இருக்கும்.

அதிரடி சண்டைகளுடன் திரைக்கதை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகரும். ஒரு புதிய பிரச்சினை படத்தின் கருவாக இருக்கும். நீதுசந்திரா ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார். படத்துக்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். பிரியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.”

1 More update

Next Story