ஒத்தைக்கு ஒத்த

அரசியல், காவல் துறை, அரசாங்கம் இவை எல்லாவற்றையும் விட, மாணவ சக்தி வலிமையானது என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பு உணர்த்திய படம், ‘ராஜநாகம்.
கல்லூரி மாணவராக நடிக்க தோற்றத்தை மாற்றினார், அதர்வா!
’ “மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான்” என்ற அந்த படத்தின் பாடல், தற்போதைய சூழ்நிலைக்கும் பொருந்தும் வகையில் அமைந்திருந்தது. பல ஆண்டுகளுக்குப்பின், முழுக்க முழுக்க மாணவர்களின் சக்தியை கருவாக வைத்து ஒரு புதிய படம் தயாராகிறது. இந்த படத்துக்கு, ‘ஒத்தைக்கு ஒத்த’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
இதில், அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் தியாகராஜன், ‘அஞ்சாதே’ நரேன் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்கிறார். தினேஷ் கார்த்திக் தயாரிக்கிறார். ‘அட்டகத்தி,’ ‘மெட்ராஸ்’ படங்களில் பா.ரஞ்சித்திடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த பர்னீஷ் டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி இவர் கூறியதாவது:-
“மாணவர்கள் என்றால் யார், அவர்களின் பலம் என்ன? என்பதை இப்போது ஒட்டு மொத்த உலகமும் உணர்ந்து இருக்கும். இந்த தருணத்தில், மாணவர்களின் கல்லூரி வாழ்க்கையை மையமாக கொண்டு ஒரு படத்தை உருவாக்குவதை பெருமையாக கருதுகிறோம்.
இந்த படத்துக்காக, கல்லூரி மாணவர் தோற்றத்துக்கு அதர்வா மாறுகிறார். கட்டுமஸ்தான உடலமைப்பில் இருந்து மாணவர் தோற்றத்துக்கு மாறுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதற்கு முழுமையான அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் தேவை. கதாபாத்திரத்துக்காக அதர்வா அப்படி மாறியிருக்கிறார்.
இனி வரும் காலம், மாணவர்களின் கையில்தான் இருக்கிறது என்பதை தெளிவாக உணர்த்தக் கூடியதாக இந்த படம் இருக்கும்.”

Next Story