நிசப்தம்


நிசப்தம்
x
தினத்தந்தி 3 Feb 2017 12:43 PM IST (Updated: 3 Feb 2017 12:43 PM IST)
t-max-icont-min-icon

புதுமுகம் அஜய், ‘நாடோடிகள்’ அபிநயா, கிஷோர், கன்னட நடிகர் ராமகிருஷ்ணா, டைரக்டர் வெங்கடேஷ், பேபி சாத்தன்யா ஆகியோர் நடித்த ‘நிசப்தம்’ படத்தை மைக்கேல் அருண் டைரக்டு செய்திருக்கிறார்.

பெங்களூருவில் வசிக்கும் தமிழ் குடும்பத்தை பற்றிய படம், ‘நிசப்தம்’

படத்தை பற்றி அவர் சொல்கிறார்:-

“பெங்களூருவில் வசிக்கும் ஒரு தமிழ் குடும்பத்தை பற்றிய கதை இது. இன்றைய சமூக சூழலில் மனிதநேயம் மற்றும் மனிதர்களுக்குள் மனமாற்றம் எவ்வளவு முக்கியம் என்பதை முக்கிய கருவாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது. படம் முழுவதும் பெங்களூருவின் மையப்பகுதிகளில் படமாக்கப்பட்டு இருக்கிறது.

பெங்களூருவில் படமாக்கப்படும்போது காவல் துறை முதல் அனைத்து மக்களும் படத்தின் கதையை உணர்ந்து ஒத்துழைப்பு கொடுத்து உதவியதை மறக்க முடியாது. முக்கியமாக, போலீஸ் கமிஷனர் இந்த படத்தின் கதையை கேட்டு போலீஸ் நிலையத்திலும், மத்திய சிறையிலும் படப்பிடிப்பு நடத்த அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.

படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களின் தன்மையை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள். குறிப்பாக கதாநாயகி அபிநயா தனது கதாபாத்திரத்தை சவாலாக ஏற்று நடித்துள்ளார். படத்தின் கதையை கேட்டதும், உடனே ‘கால்ஷீட்’ கொடுத்து நடித்தார்.

செப்டம்பர் இறுதியில் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தை க்ருப்பா கிதியோன், ஜெயரதி லாரன்ஸ், ப்ரச்சி சுக்லா, வளர்மதன், பெருமாள் ஆகியோருடன் இணைந்து தயாரித்து இருக்கிறார்.”
1 More update

Next Story