விஜய்யின் 61-வது படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்


விஜய்யின் 61-வது படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்
x
தினத்தந்தி 3 Feb 2017 1:27 PM IST (Updated: 3 Feb 2017 1:27 PM IST)
t-max-icont-min-icon

‘தெறி,’ ‘பைரவா’ படங்களை அடுத்து விஜய் கதாநாயகனாக நடிக்கும் 61-வது படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இது, தேனாண்டாள் பிலிம்சின் 100-வது படம் ஆகும்.

இதில் விஜய்யுடன் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா ஆகிய மூன்று பேரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். டைரக்டரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விஜய்-ஜோதிகா நடித்த ‘குஷி’ படத்தை டைரக்டு செய்தவர், எஸ்.ஜே.சூர்யா. பல வருடங்களுக்குப்பின், விஜய்-ஜோதிகா நடிக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், வடிவேல் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். விஜயேந்திர பிரசாத் திரைக்கதையை எழுத, கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், அட்லீ. என்.ராமசாமி தயாரிக்கிறார். படப்பிடிப்பு கடந்த 1-ந் தேதி சென்னையில் தொடங்கியது. படத்தில் இடம்பெறும் சில முக்கிய காட்சிகள் வட இந்தியாவிலும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் நடைபெற இருக்கிறது.
1 More update

Next Story