கடம்பன்


கடம்பன்
x
தினத்தந்தி 4 Feb 2017 11:50 AM IST (Updated: 4 Feb 2017 11:50 AM IST)
t-max-icont-min-icon

ஆர்யா தற்போது ‘மஞ்சப்பை’ இயக்குனர் ராகவன் இயக்கத்தில் ‘கடம்பன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஆர்யா முதன்முறையாக பழங்குடி இனமக்களுடன் இணைந்து, காட்டுவாசியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், தாய்லாந்து காடுகளில் படமாக்கப்பட்டது.

இப்படத்தில் ஆர்யாவுக்கு  ஜோடியாக ‘மெட்ராஸ்’, ‘கதகளி’ உள்ளிட்ட படங்களின்  நாயகி கேத்ரீனா தெரசா நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் படப்படிப்பிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் முடிந்துவிட்டது. தற்போது, இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில்,  பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளதாகவும் தெரிகிறது. ஒளிப்பதிவு எஸ்.ஆர்.சதீஷ்குமார். இப்படத்தை, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில், ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ளார்.
1 More update

Next Story