எந்திரன் 2.0


எந்திரன் 2.0
x
தினத்தந்தி 16 Feb 2017 3:18 PM IST (Updated: 16 Feb 2017 3:18 PM IST)
t-max-icont-min-icon

‘எந்திரன்’ படத்தின் வெற்றியை அடுத்து அதன் 2-வது படமாக ‘2.0’ படம் தயாராகி வருகிறது.

 ரஜினியுடன் அக்‌ஷய் குமார், எமிஜாக்சன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் ரூ.350 கோடி செலவில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். கதாநாயகியாக ஏமி ஜாக்சன் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். முத்துராஜ் கலை இயக்குநராகவும் படத் தொகுப்பாளராக ஆண்டனியும் ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றுகிறார்கள்.
1 More update

Next Story