இடி மின்னல் புயல் காதல்

பெற்றோர்கள் கண்ணோட்டத்துடன் ஒரு காதல் கதை வெள்ளைப் பன்றியை முக்கிய கதாபாத்திரமாக வைத்து, அதி நவீன தொழில்நுட்பத்துடன், ‘ஜெட்லி’ படத்தை தயாரித்து இயக்கிய ஜெகன்சாய் அடுத்து,
‘இடி மின்னல் புயல் காதல்’ என்ற பெயரில், ஒரு புதிய படம் தயாரிக்கிறார். இந்த படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், யோகேந்திரன் மகேஷ். இவர் டைரக்டர் ஹரியிடம் உதவியாளராக இருந்தவர். ‘தகப்பன் சாமி,’ ‘எப்போதும் வென்றான்’ படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர்.
‘இடி மின்னல் புயல் காதல்’ பற்றி டைரக்டர் யோகேந்திரன் மகேஷ் கூறும்போது, “இது, ஒரு காதல் கதை. காதலை பெற்றோர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்? என்பதை பெற்றோர்கள் கண்ணோட்டத்தில் சொல்லப்படும் கதை. புதுமுகம் திராவிடன் கதாநாயகனாக நடிக்கிறார். ‘என்னை அறிந்தால்,’ ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களில் இணை ஒளிப்பதிவாளராக பணி புரிந்த துலீப்குமார், இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். சி.சத்யா இசையமைக்கிறார். படப்பிடிப்பு அடுத்த மாதம் நாகர்கோவிலில் தொடங்கி தொடர்ந்து நடைபெற இருக்கிறது.”

Next Story