அரசியல் தலைவரின் மர்ம மரணத்தை சொல்லும் படம்


அரசியல் தலைவரின் மர்ம மரணத்தை சொல்லும் படம்
x
தினத்தந்தி 28 Feb 2017 12:09 PM IST (Updated: 28 Feb 2017 12:08 PM IST)
t-max-icont-min-icon

மர்மமான முறையில் மரணம் அடைந்த ஒரு அரசியல் தலைவரின் கதை படமாகிறது. படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை.

அரசியல் தலைவரின் மர்ம மரணத்தை பற்றி கதாநாயகன் துப்பு துலக்குவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. ஹாலிவுட் தொழில்நுட்பத்துடன் படம் தயாராகிறது.

புதுமுகம் வைதேஷ் ஹரிஹரன் கதாநாயகனாக நடிக்கிறார். தீபன் டைரக்டு செய்கிறார். மாயா மீடியா ஒர்க் மற்றும் ஆம்சி பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பிரெட் ஆலன் மற்றும் விஜய் இசையமைக்கிறார்கள்.

படத்தை பற்றி டைரக்டர் தீபன் கூறும்போது, “அவதார், ஜங்கில் புக், ஆங்ரி பேட் ஆகிய படங்களைப் போல் 3 டி தொழில்நுட்பத்தில், இந்த படம் தயாராகிறது. தேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் கிராபிக்ஸ் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய சினிமாவில் இதுபோன்ற படங்களை, இனி நிறைய எதிர்பார்க்கலாம்.”
1 More update

Next Story