தீரன் அதிகாரம் ஒன்று


தீரன் அதிகாரம் ஒன்று
x
தினத்தந்தி 17 March 2017 12:27 PM IST (Updated: 17 March 2017 12:27 PM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தானில் நடைபெறும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படப்பிடிப்பில் கார்த்தி மணிரத்னம் டைரக்‌ஷனில், ‘காற்று வெளியிடை’ படத்தில் நடித்து முடித்த கார்த்தி அடுத்து, ‘சதுரங்க வேட்டை’ புகழ் வினோத் டைரக்‌ஷனில், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்து வருகிறார்.

 இந்த படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் பகுதியில் இரவு-பகலாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, பூஜ் பகுதியில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடைபெறுவது பற்றி டைரக்டர் வினோத் கூறுகிறார்:-

“எங்கள் கதைக்கு என்ன தேவையோ, அது எங்களுக்கு இங்கே சரியாக கிடைத்துள்ளது. கதையுடன் ஒன்றுகிற இடமாக இருப்பதால், இந்த பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. படத்தின் முக்கியமான காட்சிகளை இங்கே படமாக்கி வருகிறோம். பூஜ் பகுதியில், சண்டை காட்சிகளை பரபரப்பாக படமாக்க இருக்கிறோம்.

ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மேற்பார்வையில், நெடுஞ்சாலையில் நடை பெறும் அதிரடியான கார் துரத்தல் காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளோம். ராஜஸ்தானில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி விட்டு, சென்னை திரும்ப இருக்கிறோம். இந்த படம், ரசிகர்களுக்கு ஒரு ‘விஷுவல் ட்ரீட்’ ஆக இருக்கும்.

கார்த்தியுடன் ரகுல் ப்ரீத்சிங், அபிமன்யு சிங், போஸ் வெங்கட் ஆகியோர் நடித்து வருகிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப் பதிவு செய்கிறார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகிய இருவரும் தயாரித்து வருகிறார்கள்.”
1 More update

Next Story