1 ஏ.எம்

முழுக்க முழுக்க மாணவர்களை வைத்து, ‘1 ஏ.எம்.’ என்ற பெயரில், ஒரு திகில் படம் உருவாகி இருக்கிறது.
15 நாட்களில் முடிவடைந்தது மாணவர்களை வைத்து உருவான திகில் படம்
‘கிரிங் கிரிங்,’ ‘ஜித்தன்-2’ ஆகிய படங்களை இயக்கிய ராகுல் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்து இருக்கிறார். படத்தை பற்றி இவர் கூறியதாவது:-
“மனதளவில் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் அதற்கு காரணமானவர்களை எப்படி பழிவாங்குகிறான்? என்பதே படத்தின் கதை. தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் பார்வையில் இருந்து தப்ப முடியாது என்ற சமூக கருத்தை படத்தில் சொல்லியிருக்கிறோம். அதற்காகவே தணிக்கை குழுவினர் படத்தில் ஒரு காட்சியை கூட நீக்காமல், ‘யு’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள்.
ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தில், பாடல்கள் கிடையாது. ஒரே ஒரு சண்டை காட்சி மட்டும் இருக்கிறது. மோகன், சஷ்வதா ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக நடித்து இருக்கிறார்கள். கதைப்படி, படத்தில் ஒரு பேய் இருக்கிறது. பழிவாங்க புறப்படும் இளைஞன், அந்த பேயிடம் சிக்கிக் கொள்வது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. 80 சதவீத படப்பிடிப்பு இரவு நேரங்களிலேயே நடத்தப்பட்டது. 15 நாட்களில் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.”

Next Story