சென்னையில் ஒரு நாள்-2


சென்னையில் ஒரு நாள்-2
x
தினத்தந்தி 27 April 2017 3:08 PM IST (Updated: 27 April 2017 3:07 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் திரையுலகின் ‘சில்வெஸ்டர் ஸ்டலொன்’ என்று அழைக்கப்படும் சரத்குமார் தமிழில், சற்று இடைவெளிக்குப்பின் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக களம் இறங்குகிறார்.

‘சென்னையில் ஒரு நாள்-2’ சரத்குமார் நடிக்கும் திகில் படம்

 இது, ‘சென்னையில் ஒரு நாள்’ படம் போல் பரபரப்பான திகில் கதையம்சம் கொண்ட படம் என்பதால், ‘சென்னையில் ஒரு நாள்-2’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குனர் ஜெ.பி.ஆர். டைரக்டு செய்கிறார். ராம் மோகன் தயாரிக்கிறார். ‘மாயா’ படத்துக்கு இசையமைத்த ராண், இந்த படத்துக்கு இசையமைக்கிறார். பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் திகில் கதையை தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

சரத்குமாருடன் அஞ்சனா பிரேம், முனீஸ்காந்த், ராஜசிம்மன் ஆகியோரும் நடிக்கிறார்கள். ‘நிசப்தம்’ பட புகழ் பேபி சாதன்யா, முக்கிய வேடத்தில் நடிக்கிறாள்.

படத்தை பற்றி டைரக்டர் ஜெ.பி.ஆர். கூறும்போது, “இந்த படத்தில் சரத்குமாரின் கதாபாத்திரம், ‘ஸ்டைலிஷ்’ ஆக இருக்கும். படத்தில் அவர் புலன் விசாரணை செய்யும் முறை பரபரப்பாக இருக்கும். படப்பிடிப்பு கோவையில் தொடங்கி, தொடர்ந்து 30 நாட்கள் நடைபெற இருக்கிறது” என்றார்.
1 More update

Next Story