விண்வெளிப் பயணக் குறிப்புகள்


விண்வெளிப் பயணக் குறிப்புகள்
x
தினத்தந்தி 23 Jun 2017 12:29 PM IST (Updated: 23 Jun 2017 12:28 PM IST)
t-max-icont-min-icon

‘விண்வெளிப் பயணக் குறிப்புகள்’ என்ற பெயரில், ஒரு புதிய படம் தயாராகிறது.

 இந்த படத்தை பற்றி அதன் டைரக்டர் ஜெயப்பிரகாஷ் கூறுகிறார்:-
“ஒரு சிறு நகரத்தில் அரசியல் பின்புலத்தோடு அதிகாரம் செலுத்தி வருகிறார், படிப்பறிவற்ற கதை நாயகன். அறிவை வளர்த்துக் கொள்வதற்காக அவர் செய்யும் முயற்சிகளால் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள், நகர மக்கள். அவருடைய கோமாளித்தனங்களுக்கு முடிவு கட்ட திட்டமிடும்போது, தனது விண்வெளி சுற்றுலா பயணத் திட்டத்தை அறிவிக்கிறார், கதை நாயகன்.

அவருக்கு எப்படி விண்வெளிப் பயணம் செல்லும் ஆசை வந்தது? தனது குறிக்கோளில் அவர் எப்படி வெற்றி அடைந்தார், அவரை தடுக்க நகர மக்கள் செய்த முயற்சிகள் என்ன? என்பதை கதை சித்தரிக்கிறது. நேரியல் முரண் வடிவில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

படத்தின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை கவனித்திருப்பதுடன், யாழ்மொழி ரா பாபுசங்கருடன் இணைந்து படத்தை தயாரிக்கிறேன். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் அடர்ந்த வனப்பகுதிகளிலும், மதுரை மற்றும் அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளிலும் படம் வளர்ந்து இருக்கிறது.
1 More update

Next Story