பலூன்


பலூன்
x
தினத்தந்தி 4 July 2017 9:21 AM GMT (Updated: 4 July 2017 9:21 AM GMT)

ஜெய், அஞ்சலி ஜோடியாக நடித்துள்ள படம், ‘பலூன்.’ இதில், ஜனனி அய்யர் இன்னொரு நாயகியாக வருகிறார். இந்த படத்தை சினிஷ் டைரக்டு செய்துள்ளார். படத்தை பற்றி அவர் சொல்கிறார்:

‘பலூன்’ படத்தில் 3 தோற்றங்களில், ஜெய்!

“1989-ல் பலூன் வியாபாரியாக இருக்கும் ஜெய்யும், ஜனனி அய்யரும் காதலர்கள். ஜெய் ஒரு கட்டத்தில் இறந்து போகிறார். தற்போதைய கால கட்டத்தில், இன்னொரு ஜெய் சினிமா டைரக்டராகி படம் இயக்க தயாராகிறார். திகில் கதை அவருக்கு பிடிக்காது. ஆனாலும், அதுபோன்ற கதையை படமாக்கும் நிர்ப்பந்தம் வருகிறது. அது ஏன்? என்பது கதை.

பேயின் பயமுறுத்தல்களுடன், திகில் படமாக தயாராகி உள்ளது. இதில் பேய் வருவதற்கு முன்னால் பலூன் வரும். அதனால்தான் படத்துக்கு அந்த பெயர் சூட்டப்பட்டு உள்ளது. ஜெய் மூன்று தோற்றங்களில் வருகிறார். காதல், சஸ்பென்ஸ் கலந்த திகில் படமாக, இது தயாராகி உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். பின்னணி இசை பேய் படத்துக்கு வலுவூட்டும் வகையில் பயங்கரமாக அமைந்துள்ளது. அருண் பாலாஜி, கந்தசாமி நந்த குமார், திலீப் சுப்பராயன் ஆகியோர் தயாரித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன. படம், விரைவில் திரைக்கு வரும்.”

Next Story